internet

img

புதிய வசதியை அறிமுகம் செய்த மொஸில்லா!

மொஸில்லா நிறுவனம், தனது பையர்பாக்ஸ் உலாவில் பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் (Picture-in-picture) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மோஸில்லா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த வசதியில், வீடியோ தளங்களை பார்வையிடுவதற்கு இலகுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடியோ ஒன்றினை பார்வையிட்டுக்கொண்டே வேறொரு டேப்பில் (Tab) மற்ற இணையதளங்களையும் பார்வையிடக்கூடியதாக இருக்கும். இதற்காக சிறிய விண்டோவில் குறித்த வீடியோக்கள் அனைத்து புதிய டேப்களிலும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் பையர்பாக்ஸ் உலாவியில் மட்டும் இவ்வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் லினக்ஸ், மேக் ஓஎஸ் போன்ற இயங்குதளங்களுக்கு, வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.